/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாய் அடித்து கொலை போலீஸ் வழக்கு பதிவு
/
நாய் அடித்து கொலை போலீஸ் வழக்கு பதிவு
ADDED : ஏப் 24, 2024 12:26 AM
ஆலந்துார், சென்னை, ஆலந்துார், இப்ராஹிம் தெருவில் சில நாட்களுக்கு முன் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. குட்டிகளுக்கு பாதுகாப்பாக, சாலையில் செல்வோரை அது குரைத்து துரத்தியுள்ளது.சிலரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த சிலர் அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.
அதனைப் பார்த்த உள்ளூர் விலங்குகள் நல ஆர்வலர்கள், பீப்பிள் பார் எத்திக்கல் டிரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ் எனும் பீட்டா அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் சிஞ்சனா சுப்ரமணியன் மற்றும் ஆர்வலர்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து, மவுன்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பிறந்து நான்கு நாட்களே ஆன நாய்க்குட்டிகள் தாயை பிரிந்த நிலையில், தற்போது விலங்குகள் நல ஆர்வலர்களால் பராமரிக்கப்படுகின்றன.

