/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பார்வையாளர்களின் கவனம் பெற்ற நாடகம்
/
பார்வையாளர்களின் கவனம் பெற்ற நாடகம்
ADDED : மே 26, 2024 12:20 AM

சென்னை,
எம்.எஸ்., சுப்புலட்சுமியை மானசீக குருவாக கொண்டு, மேடை பாடகியான சஹானாவின் வாழ்க்கை, இசையில் சென்றுக் கொண்டிருந்தது.
பத்திரிகையாளர் ராஜன் அறிமுகம் கிடைத்ததும், சஹானா வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதில் ராஜன் நண்பரான அமைச்சரின் மகனுக்கு, சஹானா மீது காதல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் தனியாக இருக்கும் சஹானாவை வன்கொடுமை செய்யும்போது, அமைச்சரின் மகனை கொன்று, சஹானா சிறை செல்கிறார்.
மகனை கொன்ற சஹானாவை, பழித்திர்க்க முயலும் அமைச்சர் விபத்தில் இறக்கிறார். சஹானாவின் மகளை, அமெரிக்காவில் வளர்த்து வரும் ராஜன், சஹானாவிடம் மீண்டும் ஒப்படைக்கிறார்.
வழக்கமான நாடகங்களில் இருந்து மாறுபட்டு, சமூக நாடகமான வல்லமை தாராயோ, ஸ்ரீ தியாக பிரம்ம ஞான சபா சார்பில், தி.நகர் வாணி மஹாலில் நேற்று நடந்தது.
டி.வி.ராதாகிருஷ்ணன் கதை எழுத, இந்நாடகத்தை நாடக நடிகை ஸ்ருதி இயக்கி, தயாரித்துள்ளார். சஹானா என்ற பிரதான கதாபாத்திரத்தில், தன் நடிப்பாற்றலை ஸ்ருதி வெளிப்படுத்தி, பார்வையாளரின் கவனத்தை பெற்றார்.
சினிமாவை போல் பார்வையாளர்கள் இடையே விறுவிறுப்பை ஏற்படுத்தும் விதமாக கதையோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.