/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் கோவிலில் திருடி கால்வாயில் கிடந்தவர் சிக்கினார்
/
போதையில் கோவிலில் திருடி கால்வாயில் கிடந்தவர் சிக்கினார்
போதையில் கோவிலில் திருடி கால்வாயில் கிடந்தவர் சிக்கினார்
போதையில் கோவிலில் திருடி கால்வாயில் கிடந்தவர் சிக்கினார்
ADDED : ஜூலை 20, 2024 01:12 AM
பெரம்பூர்:பெரம்பூர், முரசொலிமாறன் மேம்பாலத்தின் கீழ், நாகாத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 6:00 மணியளவில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பித்தளை விளக்குகள், பாத்திரம், 10,000 ரூபாய் காணாமல் போயிருந்தது. அப்போது, கோவில் அருகே உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து ஒருவர், காப்பாற்றுமாறு கூக்குரலிட்டுள்ளார்.
செம்பியம் போலீசார் கால்வாயில் கிடந்த நபரை மீட்டு விசாரித்தனர். இதில் அவர், ஆனந்த், 34, என தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு, கோவிலில் பொருட்களை திருடிக் கொண்டு ஓடும் போது, மது போதையில் இருந்த ஆனந்த், மழைநீர் கால்வாயில் விழுந்து அடிபட்டு மயங்கியது தெரிந்தது.
இவருடன் திருட வந்த மோகன், சுரேந்தர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.