/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடுரோட்டில் இறுதி சடங்கு பாலவேடு ஊராட்சியில் அவலம்
/
நடுரோட்டில் இறுதி சடங்கு பாலவேடு ஊராட்சியில் அவலம்
நடுரோட்டில் இறுதி சடங்கு பாலவேடு ஊராட்சியில் அவலம்
நடுரோட்டில் இறுதி சடங்கு பாலவேடு ஊராட்சியில் அவலம்
ADDED : ஜூலை 08, 2024 01:47 AM

ஆவடி:வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது, பாலவேடு ஊராட்சி.
பாலவேடு ஊராட்சியில், பெரிய காலனி உள்ளது. இங்கு, மேட்டுத் தெரு, முத்தமிழ் நகர் மற்றும் காந்தி நகரில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் புலியூர், பாக்கம், ஆலத்துார் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், பாலவேடு பெரிய காலனி, மேட்டு தெருவில் உள்ள நீர்வழிப் பாதை வழியாக, புழல் ஏரியை சென்றடைகிறது.
மேட்டுத்தெருவில் உள்ள நீர்வழிப் பாதை ஒட்டி, இறுதி சடங்கு செய்வதற்கு காரிய மேடை, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் சரியான பராமரிப்பின்றி, வெள்ள பாதிப்பில் காரிய மேடை சிதிலமடைந்தது.
இறுதி சடங்கு செய்வதற்கு தனியாக இடம் இல்லாமல், மேட்டுத்தெரு, சாலை நடுவில் பந்தல் போட்டு இறுதி சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுத்தெருவில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இதனால், 20 ஆண்டுகளாக சாலையையே, காரிய மேடையாக பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் வாகன ஓட்டிகளும், பகுதிவாசிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பாலவேடு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மேட்டு சாலையை சீரமைத்து, தண்ணீர் வசதியுடன், காரிய மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.