/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூர் பள்ளியில் புகுந்த சாரைப்பாம்பு
/
பெரம்பூர் பள்ளியில் புகுந்த சாரைப்பாம்பு
ADDED : ஆக 02, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் பள்ளியில், நேற்று காலை பாம்பு ஒன்று இருப்பதை, பள்ளி மாணவர்கள் பார்த்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
இதுகுறித்த தகவலின்படி, செம்பியம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின், நீண்ட நேரம் போராடி, பள்ளி வளாகத்தின் அருகே மின் பகிர்மானப் பெட்டியில் இருந்த ஐந்து அடி நீள சாரைப்பாம்பை பிடித்தனர். அதை பத்திரமாக, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.