ADDED : ஜூலை 26, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருகம்பாக்கம், விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கவுதம், 21. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த போது, இருவர் கவுதமை, கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.
விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து, தொடர்புள்ள ஆழ்வார்திருநகரை சேர்ந்த விஜய், 24, மற்றும் 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், 17 வயது சிறுவன் போதை மாத்திரை விற்றதால், போலீசார் கைது செய்துள்ளனர். பிணையில் வந்த சிறுவன், போலீசிடம் கவுதம் மாட்டிவிட்டதாக நினைத்து வெட்டியது தெரிந்தது.