/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாய் துார் வாரும் பணியில் பன்முக ரோபோட்டிக் இயந்திரம்
/
கால்வாய் துார் வாரும் பணியில் பன்முக ரோபோட்டிக் இயந்திரம்
கால்வாய் துார் வாரும் பணியில் பன்முக ரோபோட்டிக் இயந்திரம்
கால்வாய் துார் வாரும் பணியில் பன்முக ரோபோட்டிக் இயந்திரம்
ADDED : செப் 03, 2024 12:17 AM

சென்னை, அம்பத்துார் மண்டலம் 7வது வார்டுக்கு உட்பட்ட பாடி புதுநகர் பகுதியில், மழைநீர் வடிகால் துார் வாருவதற்காக, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 'ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்' என்ற இயந்திரத்தை, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கொளத்துார் மற்றும் அம்பத்துார் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் பிரியா, பின் அளித்த பேட்டியாவது:
கூவம் மறு சீரமைப்பு பணிக்காக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறோம். கூவம் மறு சீரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட செலவு பற்றிய வெள்ளை அறிக்கையை, காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் எழுதிய கடிதம் என் கைக்கு கிடைக்கவில்லை. அவரின் சமூக வலைதள பதிவை பார்த்தேன்; அதற்கு உரிய விளக்கம் அளிப்பேன்.
எதிர்வரும் பருவமழை எதிர் கொள்ளும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில், 35 மீட்டருக்கு கீழ் அகலம் கொண்ட கால்வாய்களில், 'ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்' இயந்திரம் கொண்டு துார் வாரப்படும். இதற்காக, ஆறு இயந்திரங்கள் உள்ளன.
மேலும், இரண்டு ஆம்பிபியன் வாகனங்கள், மூன்று மினி ஆம்பிபியன் வாகனங்கள், ஏழு நீர் இறைக்கும் ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஒன்பது ைஹட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள் உள்ளன.
இந்த இயந்திரங்களை கொண்டு, அடையாறு ஆறு, பகிங்ஹாம் கால்வாய், ஜல்லடையான்பேட்டை, வேளச்சேரி, மணலி ஆகிய ஏரிகளில் துார்வாரப்படும். மேலும், ஏகாங்கிபுரம், நொளம்பூர், விருகம்பாக்கம், ரெட்டிக்குப்பம், காந்தி, பாடிபுதுநகர் ஆகிய கால்வாய்களில் துார் வாரும் பணி துவங்கி உள்ளது.
மேலும், குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட உள்ள 'ட்ரைன் மாஸ்டர்' இயந்திரம் வாயிலாக, கேப்டன் காட்டன் கால்வாய் துார் வாரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.