/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையம் எதிரே ரத்த வெள்ளத்தில் சடலம் பலாத்காரம் செய்து பெண் கொலை?
/
காவல் நிலையம் எதிரே ரத்த வெள்ளத்தில் சடலம் பலாத்காரம் செய்து பெண் கொலை?
காவல் நிலையம் எதிரே ரத்த வெள்ளத்தில் சடலம் பலாத்காரம் செய்து பெண் கொலை?
காவல் நிலையம் எதிரே ரத்த வெள்ளத்தில் சடலம் பலாத்காரம் செய்து பெண் கொலை?
ADDED : ஆக 24, 2024 12:08 AM
அம்பத்துார், சென்னை அடுத்த அம்பத்துாரில், டன்லப் தொழிற்சாலை வளாகம் உள்ளது. இதன் எதிரே, ஒருங்கிணைந்த அம்பத்துார் நீதிமன்றம், காவல் நிலையம், மண்டல அலுவலகம் உள்ளது.
பல ஆண்டுகளாக மூடப்பட்டு, பாழடைந்த நிலையில் உள்ள டன்லப் தொழிற்சாலை வளாகத்தில், நேற்று மதியம் சிலர், இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர்.
அப்போது, கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக பெண் சடலம் கிடந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த அம்பத்துார் போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பெண்ணிற்கு, 35 வயது இருக்கலாம். இறந்து இரு நாட்களாகின்றன. உடம்பின் பல இடங்களில் காயங்கள் உள்ளன. ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடப்பதால், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகே, பெண்ணின் இறப்பு குறித்து தெரியவரும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில், காவல் நிலையம் எதிரே பெண் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

