/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூட் மாறி சென்ற ஆட்டோ ஓட்டுனருடன் இளம்பெண் தகராறு
/
ரூட் மாறி சென்ற ஆட்டோ ஓட்டுனருடன் இளம்பெண் தகராறு
ADDED : செப் 15, 2024 12:27 AM
ஓட்டேரி, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் தீபிகா, 26. கடந்த 12ம் தேதி இரவு 10:00 மணியளவில், தன் தாய் சுதாவுடன், திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு செல்ல, ஆயிரம்விளக்கு பகுதியிலிருந்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த வீரபாண்டியன், 50, என்பவரின் ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளனர்.
'செல்ல வேண்டிய வழி தெரியாது' என ஆட்டோ ஓட்டுனர் கூறியதால், மொபைல் போனில் 'கூகுள் மேப்' காட்டும் பாதையை பின்பற்றி செல்லுமாறு தீபிகா கூறியுள்ளார்.
குறிப்பிட்ட துாரம் வரை 'மேப்' வழித்தடத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுனர், அதன் பின் ரூட் மாறி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபிகா கேட்ட போது முரண்பாடான பதில் அளித்துள்ளார்.
ஓட்டேரி மார்க்கெட் அருகே தீபிகா சத்தம் போட்டு ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ஆட்டோ ஓட்டுனரும் பதிலுக்கு தகாத வார்த்தையில் பேசி அடித்ததாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த தீபிகா, ஆட்டோ சாவியை எடுத்து துார வீசியுள்ளார். இருதரப்பிற்கும் வாக்குவாதம் முற்றவே, பகுதிவாசிகள் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டியன், ஆட்டோவை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து, நேற்று தீபிகா ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரிக்கின்றனர்.