/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் விமரிசை
/
காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் விமரிசை
ADDED : ஆக 08, 2024 12:53 AM

மாங்காடு,ஆடிப்பூரம், அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் உற்சவம். இத்திருவிழாவை முன்னிட்டு, குன்றத்துார் அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று, விசேஷ பூஜைகள் நடந்தன.
அதிகாலை 5:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. 1,008 கலச அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, வெள்ளி ரிஷப வாகனத்தில், அம்மன் வீதி உலா வந்தார்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள், பக்தர்களுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டன. வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மீனாட்சி அம்மனுக்கு நேற்று காலை, உச்சி காலத்தில் மஞ்சள் காப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
மாலை அம்பாளுக்கு 150 டஜன் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பின், ஆறடி உயரத்திற்கு வளையல் மாலை சார்த்தப்பட்டது.