/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் சென்னையில் விஜய யாத்திரை
/
அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் சென்னையில் விஜய யாத்திரை
அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் சென்னையில் விஜய யாத்திரை
அபிநவ சங்கர பாரதி சுவாமிகள் சென்னையில் விஜய யாத்திரை
ADDED : ஏப் 28, 2024 01:05 AM

சென்னை:கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம், கூடலி சிருங்கேரி மஹா சம்ஸ்தானம், தக்சிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின் 72வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள்.
இவரின் விஜய யாத்திரை, மே 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
இதை முன்னிட்டு, பட்டன பிரவேஷம் மற்றும் ஷோபா யாத்திரை மே 4ம் தேதி மாலை 5:00 மணி முதல் சென்னை, மேற்கு மாம்பலம், உமாபதி தெரு விரிவாக்கம், கோல்கட்டா காளி கோவிலில் இருந்து, அயோத்தியா மண்டபம் வரை நடக்கிறது.
அயோத்தியா மண்டபத்தில் மஹா சுவாமிகளின் அருளாசியும், சகஸ்ர சண்டி மஹா யக்ஞமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஜகத்குரு வேதபாராயணம் அறக்கட்டளையின், 2,533வது சங்கர ஜெயந்தி பிரிவினர் செய்து வருகின்றனர்.
அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகள் பெசன்ட்நகர், ஆவின் மில்க் டிப்போ அருகில் உள்ள 17வது குறுக்கு தெருவில் தங்கி, பூஜைகள் நடத்தி அருளாசி வழங்குகிறார். மேலும், பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கிரஹ பிரவேசம் செய்து அருளாசியும் வழங்கவுள்ளார்.

