/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா வழக்கில் தலைமறைவு ஐ.டி., ஊழியர் பிடிபட்டார்
/
கஞ்சா வழக்கில் தலைமறைவு ஐ.டி., ஊழியர் பிடிபட்டார்
ADDED : ஜூன் 30, 2024 12:21 AM

எம்.ஜி.ஆர்.நகர், கஞ்சா விற்ற வழக்கில் மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த ஐ.டி., ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராமாபுரம், செந்தமிழ் நகரைச் சேர்ந்த ரவீந்திரன், 29, நெசப்பாக்கம் கலியப்பா தெருவைச் சேர்ந்த ராகேஷ், 24, விருகம்பாக்கம், ஏ.வி.எம்., அவென்யூவைச் சேர்ந்த யுகேந்திரா, 24, கே.கே.நகர் 63வது தெருவைச் சேர்ந்த பாலபாரதி, 23, விருகம்பாக்கம், வெங்கடேச நகரைச் சேர்ந்த ஆதித்யா, 24, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 11 கிலோ கஞ்சா, மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் 12,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கே.கே.நகர், சி.பி.ஐ., குடியிருப்பைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் கருணாகரன், 25, என்பவரை தேடி வந்த நிலையில், நேற்று அவர் சிக்கினார்.

