/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில்லா நாள் 'ரீல்ஸ்' போட்டி ரூ.3.50 லட்சம் ரொக்க பரிசு
/
விபத்தில்லா நாள் 'ரீல்ஸ்' போட்டி ரூ.3.50 லட்சம் ரொக்க பரிசு
விபத்தில்லா நாள் 'ரீல்ஸ்' போட்டி ரூ.3.50 லட்சம் ரொக்க பரிசு
விபத்தில்லா நாள் 'ரீல்ஸ்' போட்டி ரூ.3.50 லட்சம் ரொக்க பரிசு
ADDED : ஆக 26, 2024 02:19 AM
சென்னை:விபத்துகளை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு,'ரீல்ஸ்' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, போக்குவரத்து போலீசார், 3.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி உள்ளனர்.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், ஆக., 5ல் துவங்கி, நேற்றுடன் 20 நாட்களுக்கு, 'விபத்தில்லா நாள்' என்ற இலக்குடன் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
விபத்துகளை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு, 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' போட்டியும் அறிவித்து இருந்தனர்.  இதில் வெற்றி பெற்ற மூன்று பேருக்கு நேற்று, 3.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை, ராயப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் வழங்கினார்.
இந்த விழிப்புணர்வு பிரசார காலத்தில், 6 நாட்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
கடந்தாண்டு ஆக., மாதத்தில் நடந்த சாலை விபத்துகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 61.6 சதவீத விபத்துகள் குறைக்கப்பட்டு இருப்பதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.