ADDED : ஆக 20, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, பாலாஜி காலனி பிரதான சாலை 40 அடி அகலம் உடையது. இதில், பக்கவாட்டில் வடிகால் கட்டப்பட்டு உள்ளது. துார் வாரும் வகையில் அமைக்கப்பட்ட மூடியில், துளை விழுந்து விபத்து அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளது.
உள்கம்பி சேதமடைந்து உள்ளதால், பாதசாரிகள், கால்நடைகள் தவறி வடிகாலில் விழும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், தரமான மூடி அமைக்க வேண்டும்.
- ஆர்.பொன்னுதுரை, வேளச்சேரி.

