ADDED : ஆக 13, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சுற்றுலா தலமான மெரினாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மெரினாவைர சுற்றியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை இங்கு காலை மாலை நேரங்களில் மேய விடுகின்றனர்.
இதையடுத்து மாநகராட்சி மேற்பார்வையாளர் அசோக் தலைமையில், தற்காலிக ஊழியர் வேணு, விஜய், பாரதி, மோகன், விஸ்வநாதன் ஆகியோர் நேற்று மெரினா பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கச் சென்றனர்.
பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் திரிந்த மாடுகளை பறிமுதல் செய்து, வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது, மாட்டின் உரிமையாளர் ராஜா என்பவர் மாநகராட்சி தற்காலிக ஊழியர் வேணுவை, ராஜா தாக்கியுள்ளார். அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

