/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ம.க., பிரமுகர்களை வளைக்க அ.தி.மு.க., வேட்பாளர் அதிரடி
/
பா.ம.க., பிரமுகர்களை வளைக்க அ.தி.மு.க., வேட்பாளர் அதிரடி
பா.ம.க., பிரமுகர்களை வளைக்க அ.தி.மு.க., வேட்பாளர் அதிரடி
பா.ம.க., பிரமுகர்களை வளைக்க அ.தி.மு.க., வேட்பாளர் அதிரடி
ADDED : மார் 29, 2024 12:19 AM
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக பெரும்பாக்கம் ராஜசேகர் உள்ளார். இவர், இதே தொகுதியைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னை அருகாமையில் வசிப்பவர்.
தொகுதிக்கு புதிய முகம் என்றாலும், அரசியலில் அனுபவம் உள்ளவர் என்பதால் எப்படி காய்களை நகர்த்தலாம் என வியூகம் வகுத்து வருகிறார்.
அந்த வகையில், காஞ்சிபுரம் தொகுதியின் அ.தி.மு.க.,வின் முக்கிய ஆதரவாளர்களை நேரில் சந்தித்து, தேர்தல் பணியில் சுறுசுறுப்பேற்ற கேட்டு கொண்டுள்ளார். தவிர, எதிர் கட்சியினர் ஓட்டுகளை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக, பா.ம.க.,வின் காஞ்சிபுரம் நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேச்சு நடத்த சொல்லியுள்ளார். இந்த வேலைக்காக மட்டும், தன் மூன்று தம்பிகள், மனைவியின்தம்பியை களத்தில் இறக்கி உள்ளார்.
இவர்கள், தினமும் இரண்டு, மூன்று கார்களில் பெரும்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் தொகுதிக்குள் சென்று, பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகின்றனர். உடன், அப்பகுதி அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளையும், மறக்காமல் அழைத்துச் செல்கின்றனர்.
அ.தி.மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள், கடந்த 2019, 2021 தேர்தல்களில் ஒன்றாக சேர்ந்து வேலை செய்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட பழக்க வழக்கத்தால், பா.ம.க., ஓட்டுகளை இலை பக்கம் திரும்பும் வகையில், முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ம.க.,விற்கு தீவிரமாக ஓட்டு சேகரிக்கும் நிர்வாகிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக, இந்த கூட்டணி அமைந்துள்ளது.
- நமது நிருபர் -

