/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைது
/
தி.மு.க., பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைது
தி.மு.க., பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைது
தி.மு.க., பெண் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க., பெண் நிர்வாகி கைது
ADDED : மே 26, 2024 12:15 AM
சேத்துப்பட்டு, சேத்துப்பட்டு, கத்தன் தெருவைச் சேர்ந்தவர் இளவரசி, 46. எழும்பூர் தெற்கு பகுதி அ.தி.மு.க., மகளிர் அணியின் செயலராக உள்ளார்.
இவர், அதேபகுதியில் உள்ள முருகேசன் தெருவில் உள்ள ஒரு வீட்டை சில நாட்களுக்கு முன் வாங்கியுள்ளார். அந்த வீட்டின் முன் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியை இளவரசி அகற்றிஉள்ளார்.
இதுதொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்கள், ஹரிங்டன் சாலையில் வசிக்கும், 108வது தி.மு.க., வட்ட செயலரான வான்மதி, 48 என்பவரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து,மாநகராட்சியிடம் வான்மதி புகார் தெரிவித்து, மீண்டும் பழைய இடத்தில் குப்பை தொட்டியை வைத்து உள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த இளவரசி, அவரது நண்பரான ஓ.பி.எஸ்., அணியின் மாவட்ட துனை செயலரான அவ்வைபுரம் மணிகண்டன் மற்றும் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் வான்மதியின் கட்சி அலுவகத்திற்கு சென்றனர்.
குப்பை தொட்டி தொடர்பாக, கட்சி அலுவலகத்தில், இருதரப்பினருக்கும் வாக்குவதம் ஏற்பட்டது. அப்போது, இளவரசியின் ஆதரவாளர்கள், நாற்காலிகளை சேதப்படுத்தி, வான்மதி உள்ளிட்டோரை தாக்கினர். இதில், வான்மதி அவரது ஆதரவாளர்கள் பாலு, 46, சிவா, 40 ஆகியோர் காயமடைந்தனர்.
சம்பவம் அறிந்து அங்கு வந்த சேத்துப்பட்டு போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் விசாரித்து, இளவரசி மற்றும் செனாய் நகரைச் சேர்ந்த அவ்வைபுரம் மணிகண்டன் ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அடையாளம் தெரியாத ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.