/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் விதிகளை தளர்த்த அடையாறு வியாபாரிகள் மனு
/
தேர்தல் விதிகளை தளர்த்த அடையாறு வியாபாரிகள் மனு
ADDED : ஏப் 17, 2024 12:29 AM
சென்னை, 'தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும், தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்' என, அடையாறு வியாபாரிகள் சங்கம் சார்பில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் காலங்களில் விதிக்கப்படும் விதிமுறைகளால், வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறோம். எனினும், தேர்தல் கமிஷன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறோம்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்தபின், கட்டுப்பாடுகள் தொடரும் என்ற அறிவிப்பு, வியாபாரிகளை வெகுவாக பாதிப்பதோடு, எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்கெட்டு விடும்.
எங்களில் பலர் சிறு வியாபாரிகள். அவர்கள் கடைகளுக்கு பொருட்களை கொள்முதல் செய்யக்கூட, பணம் எடுத்துச் செல்வது கடினமாக உள்ளது. வியாபாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
எனவே, வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி, தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும், அனைத்து தேர்தல் விதிகளையும் தளர்த்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

