ADDED : மார் 25, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை ஊராட்சியில் பண்ணை வீடு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கிளாய் கிராமத்தில் உள்ள தன் மகள் செந்தாமரை நடத்தும் முதியோர் ஆசிரமத்திற்கு, நேற்று காலை 10:30 மணிக்கு, முதல்வர் சென்றார். அங்கிருந்து, உளுந்தை பண்ணை வீட்டு தோட்டத்திற்கு மதியம் 12:00 மணிக்கு சென்றார்.
முதல்வர் வருகைக்காக தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருந்து வயலுார் வழியாக வடமங்கலம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பகுதி மக்கள் வெயிலில் சிரமப்பட்டனர்.

