/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் பிக் - அப் பாயின்ட் குளறுபடி போதிய வாகனமின்றி தொடரும் அவதி
/
ஏர்போர்ட் பிக் - அப் பாயின்ட் குளறுபடி போதிய வாகனமின்றி தொடரும் அவதி
ஏர்போர்ட் பிக் - அப் பாயின்ட் குளறுபடி போதிய வாகனமின்றி தொடரும் அவதி
ஏர்போர்ட் பிக் - அப் பாயின்ட் குளறுபடி போதிய வாகனமின்றி தொடரும் அவதி
ADDED : ஆக 01, 2024 12:54 AM

சென்னை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் பல்வேறு செயலிகள் வாயிலாக வாடகை கார்களை பதிவு செய்கின்றனர். இவர்களை வாடககை கார்கள் ஏற்றிச் செல்லும் 'பிக் - அப் பாயின்ட்' சில ஆண்டுகளாக 'டி2' முனையத்தில் செயல்பட்டு வந்தது.
மூன்று தினங்களுக்கு முன், 1 கி.மீ., துாரத்தில் உள்ள 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' எனப்படும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் பகுதிக்கு, 'பிக் - அப் பாயின்ட்' திடீரென மாற்றப்பட்டது.
பயணியர் வசதிக்காக 18 பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போதுமானவை இயக்கப்படாததால் பயணியர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:
பழைய பிக் - அப் பாயின்ட் பகுதி அருகில் இருந்ததால், வசதியாக இருந்தது. ஆனால் இப்போது பேட்டரி வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் வந்தாலும், நாங்கள் எடுத்து வரும் உடமைகளுடன் பயணிப்பதற்கு, உரிய இடம் கிடைப்பதில்லை.
மல்டி லெவல் கார்பார்க்கிங் பகுதிக்கு அருகில் இறக்கி விடுகின்றனர். உடமைகளை சுமந்து, நடந்து சென்று, குறிப்பிட்ட லிப்ட்களில் மட்டும் தான் ஏற முடியும். அங்கும் கூட்டம் அதிகம் உள்ளதால், உடமைகளுடன் லிப்டில் செல்வதற்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர், மகளிர் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியரின் வருகைக்கு ஏற்ப பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றனர்.