/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுவிற்கு அடிமையான வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
/
மதுவிற்கு அடிமையான வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
மதுவிற்கு அடிமையான வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
மதுவிற்கு அடிமையான வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 07, 2024 12:39 AM
கே.கே., நகர், சாலிகிராமம் விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 28. திருமணமாகவில்லை. கிண்டி தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்தார்.
மதுவிற்கு அடிமையான இவர், ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம் பக்கத்தினர் கே.கே.நகர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர்.
கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயகுமார் இறந்து கிடந்தார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இவரது தாயும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஓமந்துாரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.