/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்ணுாரில் மீண்டும் அமோனியா வாயு கசிவு?
/
எண்ணுாரில் மீண்டும் அமோனியா வாயு கசிவு?
ADDED : பிப் 27, 2025 12:43 AM
எண்ணுார்,எண்ணுார் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து மீண்டும் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது என, நேற்று தகவல் பரவியது.
இது தொடர்பாக, கோரமண்டல் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கை:
கோரமண்டல் இன்டர்நேஷனலின் எண்ணுார் ஆலையில், அம்மோனியா கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஆலையில், தற்போது அம்மோனியா வசதிகள் செயல்படவில்லை. எனவே, அம்மோனியா கசிவுக்கு வாய்ப்பில்லை. இதுகுறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கோரமண்டல் அனைத்து பாதுகாப்பு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்றி, அனைவரின் நலனையும் உறுதி செய்கிறது. ஆதாரமற்ற வதந்திகளால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், 'மக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

