/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊஞ்சல் துணி இறுக்கி 11 வயது சிறுவன் பலி
/
ஊஞ்சல் துணி இறுக்கி 11 வயது சிறுவன் பலி
ADDED : ஆக 24, 2024 12:17 AM
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம், சிட்கோ நகர் 48வது தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம், 38; தனியார் வங்கி மேலாளர். இவரது மகன் தருண் கிரிஷ், 11; ஆறாம் வகுப்பு மாணவர்.
சிறுவன், தந்தையின் உதவியுடன் மாடியில் உள்ள அறையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது வழக்கம். நேற்று மதியம், மாணிக்கம் வெளியில் சென்றிருந்தபோது, வீட்டின் கீழ்தளத்தில் மாணிக்கத்தின் வயதான தந்தையும், தாயும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், மாடிக்கு சென்ற சிறுவன், நாற்காலியின் மீது ஏறி துணியால் ஊஞ்சல் கட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில், சிறுவனின் கழுத்தை துணி இறுக்கியுள்ளது.
சில நிமிடங்கள் போராடிய சிறுவன் மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பின், வீட்டிற்கு வந்த மாணிக்கம் சிறுவனை தேடியபோது, ஊஞ்சலில் சிக்கி தொங்கியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது, சிறுவன் இறந்தது தெரியவந்தது. வில்லிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

