/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்டையார்பேட்டையில் மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு
/
தண்டையார்பேட்டையில் மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு
தண்டையார்பேட்டையில் மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு
தண்டையார்பேட்டையில் மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு
ADDED : ஆக 28, 2024 12:31 AM
தண்டையார்பேட்டை, சென்னை, தண்டையார்பேட்டை, காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர், 64. இவர் நேற்று குப்பை கொட்ட வீட்டின் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியே வந்த மாடு, திடீரென சேகரை முட்டி துாக்கி வீசியது. இதில் அவரின் இடது காலிலும், இடுப்பிலும் காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் சேகரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதனையில் சேகரின் கால், இடுப்பில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.