/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபயிற்சி செய்த முதியவர் ரிவர்ஸ் வந்த கார் மோதி பலி
/
நடைபயிற்சி செய்த முதியவர் ரிவர்ஸ் வந்த கார் மோதி பலி
நடைபயிற்சி செய்த முதியவர் ரிவர்ஸ் வந்த கார் மோதி பலி
நடைபயிற்சி செய்த முதியவர் ரிவர்ஸ் வந்த கார் மோதி பலி
ADDED : செப் 04, 2024 01:16 AM
வளசரவாக்கம்:வளசரவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வெங்கட்ராமன், 78.
நேற்று முன்தினம் மாலை, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினுள் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் கீதா, 32, என்பவர், தன் மகனை டியூஷன் மையத்தில் இருந்து அழைத்து வர, 'பார்க்கிங்'கில் நிறுத்தியிருந்த காரை இயக்கினார்.
காரை பின்னால் எடுக்கும்போது, தவறுதலாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் வேகமாக சென்ற கார், நடைபயிற்சியில் இருந்த வெங்கட்ராமன் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கட்ராமன் நேற்று உயிரிழந்தார். வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர்.