/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடையில் அரிசி மூட்டை சரிந்து மூதாட்டிக்கு முறிவு
/
ரேஷன் கடையில் அரிசி மூட்டை சரிந்து மூதாட்டிக்கு முறிவு
ரேஷன் கடையில் அரிசி மூட்டை சரிந்து மூதாட்டிக்கு முறிவு
ரேஷன் கடையில் அரிசி மூட்டை சரிந்து மூதாட்டிக்கு முறிவு
ADDED : ஜூன் 12, 2024 12:34 AM
சென்னை, ரேஷன் கடையில் குப்பையை பெருக்கும் போது, 50 கிலோ அரிசி மூட்டை விழுந்ததில், 78 வயது மூதாட்டியின் கால் எலும்பு முறிந்தது.
வில்லிவாக்கம், அகத்தியர் நகர், 27வது தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 78. இவர் 15 ஆண்டுகளாக ரேஷன் கடையில் குப்பை பெருக்கும் வேலை செய்து வந்தார். ரேஷன் கடை ஊழியர்கள் தடுத்த போதும், விருப்பத்தின் பெயரில் மூதாட்டி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல், மூதாட்டி ரேஷன் கடையில் குப்பையை பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது, 50 கிலோ அரிசி மூட்டை மூதாட்டியின் காலின் மீது விழுந்தது. இதனால், மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஐ.சி.எப்., மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். வில்லிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.