/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணி கடையில் பண்டல் திருடிய ஆந்திர பெண்கள் கைது
/
துணி கடையில் பண்டல் திருடிய ஆந்திர பெண்கள் கைது
ADDED : ஆக 31, 2024 12:10 AM
சென்னை, சென்னை, சவுகார்பேட்டை மின்ட் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன், 63. இவர் அதே பகுதியில், 'ஜாக்கெட் பிட்' துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, இவரது கடைக்கு வந்த இரு பெண்கள் பல டிசைன்கள் பார்த்து விட்டு, எந்த துணியையும் வாங்காமல் சென்று விட்டனர். சந்தேகமடைந்த மகேந்திரன், துணி பண்டல்களை சரிபார்த்தபோது, ஒரு பண்டல் ஜாக்கெட் பிட் துணி மாயமானது தெரியவந்தது.
சுதாரித்த கடை ஊழியர்கள், பக்கத்து தெருவில் நடந்து சென்ற இரு பெண்களையும் பிடித்து, 15,000 ரூபாய் மதிப்பிலான ஜாக்கெட் பிட் துணிகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த நல்லகுண்டா ராமதுளசி, 45, பேரம் சந்தோஷம், 42, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் யானைகவுனி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.