/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'முதுகெலும்பு அழற்சி நோய் இளைஞர்களை பாதிக்கும்'
/
'முதுகெலும்பு அழற்சி நோய் இளைஞர்களை பாதிக்கும்'
ADDED : மே 08, 2024 12:13 AM

சென்னை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மூட்டு, தசை, இணைப்பு திசு நோய் பிரிவில், வளையாநிலை முதுகெலும்பு அழற்சி நோய் தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
இந்த நோய், உடலில் பெரிய மூட்டுகள் மற்றும் முதுகெலும்பை பாதிக்கும் தன்மை உள்ளது. கீழ் முதுகு வலியாக, நோய் பாதிப்பு துவங்கும்.
இளம் வயது ஆண்களை அதிகம் பாதிக்கும், இந்நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை பெறவில்லை என்றால், கழுத்து மற்றும் முதுகெலும்பு இறுகி வளையாநிலை ஏற்படும்.
இச்சிகிச்சைக்கான விலையர்ந்த மருந்துகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய் பிரிவு தலைவர் அருள் ராஜ முருகன் கூறியதாவது:
தினமும் உடற்பயிற்சி செய்வதால், சர்க்கரைநோய், ரத்தக்கொதிப்பு, கொழுப்பு சத்து அதிகரித்தல், இதய நோய் வராமல் தடுக்கலாம். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இந்நோய் மரபணு ரீதியாக வருவது அதிகம் வாய்ப்புள்ளது. இதனால், ரத்த உறவில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

