/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா சாலை, ஓ.எம்.ஆர்., வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
/
அண்ணா சாலை, ஓ.எம்.ஆர்., வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
அண்ணா சாலை, ஓ.எம்.ஆர்., வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
அண்ணா சாலை, ஓ.எம்.ஆர்., வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்
ADDED : ஆக 15, 2024 12:17 AM
சென்னை,
சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. முறையான தொடர் ஆய்வுகள் இல்லாததால், இத்திட்டம் காலாவதியாகும் நிலையில் உள்ளது.
இதற்கு அடுத்த நிலையில், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக விரிவான வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்படும். இதில், அந்த பகுதியில் சர்வே எண் வாரியாக நில பயன்பாடு ஆராயப்படும்.
தற்போதைய நிலை மற்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கான தேவை அடிப்படையில் வகைப்பாடுகள் வரையறுக்கப்படும்.
இதன்படியே, அங்கு அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
இதேபோல் சென்னையில், அண்ணா சாலை, பழைய மாமல்லபுரம் சாலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் வருகின்றன.
இதனால், அடிப்படை வசதிகள் தேவை மற்றும் பயன்பாடு தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதைக் கருத்தில் வைத்து, இந்த இரண்டு பகுதிகளுக்கும் நகர்ப்புற மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்ணா சாலை, பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில், நகர மறுசீரமைப்பு செய்து தன்னிறைவு நிலை ஏற்படுத்தப்படும்.
இதற்காக இப்பகுதி வளர்ச்சி திட்டங்களை முறைப்படுத்தும் வகையில், உள்ளூர் பகுதி திட்டம் புதிதாக தயாரிக்கப்படும்.
இந்த பணிக்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.