ADDED : செப் 09, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
சென்னை: மாவட்ட அளவிலான, தேசிய தொழிற் பழகுநர் முகாம், வரும் 23ல் நடக்க உள்ளதாக, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில், ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சி முடித்தோருக்கு, ஆர்.கே., நகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில் பழகுநர் முகாம், வரும் 23 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளது. பயிற்சியாளருக்கு, மாதந்தோறும் உதவித்தொகையாக, 8,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழுடன், இம்முகாமில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
