UPDATED : செப் 09, 2026 03:40 PM
ADDED : செப் 09, 2026 02:50 PM
(10.09.2026)
ஆன்மிகம்
வேணுகோபால சுவாமி கோவில்
விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரம், மாலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.
பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்
பூரம் நட்சத்திரம் திருவிளக்கு பூஜை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அமாவாசை ஊஞ்சல் உற்சவம்,- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அமாவாசை வேண்டுதல், தேங்காய் கட்டுதல்,- காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
கங்கையம்மன் கோவில்
உற்சவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், மாலை 4:30 மணி, அமாவாசை ஊஞ்சல் உத்சவம்,- இரவு 7:30 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
ஆவணி அமாவாசை, பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம்,- காலை 10:30 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
கபாலீஸ்வரர் கோவில்
அமாவாசை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, -மாலை 5:00 மணி, திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வழித்துணை பாபா கோவில் * அபிஷேக ஆரத்தி --- காலை 6:00 மணி. மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்துார்.
வள்ளலார் கோவில் * தீபம் அறக்கட்டளையின் வழிபாடு, பூஜைகள் -- மாலை 6:00 மணி முதல். இடம்: தண்டீஸ்வரம், வேளச்சேரி.
வள்ளலார் இல்லம் * காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம். இடம்: வேளச்சேரி- - ஆலந்துார் உள்வட்டச்சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில்.
பொது
கணபதி தரிசனம் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசனம் விற்பனை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை.
ஐஸ்கிரீம் வணிக கண்காட்சி
ஐஸ்கிரீம் உற்பத்தி துறை, குளிரூட்டும் இயந்திரங்கள், 'பேக்கேஜிங்' மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த பிரமாண்ட வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
