/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொளத்துாரில் புது கட்டடங்கள் வடிவமைப்புக்கு ஒப்புதல்
/
கொளத்துாரில் புது கட்டடங்கள் வடிவமைப்புக்கு ஒப்புதல்
கொளத்துாரில் புது கட்டடங்கள் வடிவமைப்புக்கு ஒப்புதல்
கொளத்துாரில் புது கட்டடங்கள் வடிவமைப்புக்கு ஒப்புதல்
ADDED : செப் 09, 2024 02:30 AM
சென்னை:சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை அடிப்படையில் பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை, சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்துாரில், பல்வேறு அரசு துறைகளுக்கான அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்பாட்டு கட்டடங்கள் கட்ட, சி.எம்.டி.ஏ., நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த வகையில், கொளத்துார் தொகுதியில் புதிதாக காவல் துணை கமிஷனர் அலுவலகம், பெருவளூரில் உதவி கமிஷனர் அலுவலகம், காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் கட்டப்பட உள்ளன.
இதற்கான இடம் தேர்வு உள்ளிட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
புதிய கட்டடங்களுக்கான வடிவமைப்புகள், மதிப்பீடுகள், அதில் இடம் பெற வேண்டிய வசதிகள் குறித்து காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு தலைமையில், எழும்பூரில் சமீபத்தில் நடந்தது.
இதில், புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.