/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ே ஹா ட்டலில் வாக்குவாதம் போலீஸ்காரர் மீது தாக்கு
/
ே ஹா ட்டலில் வாக்குவாதம் போலீஸ்காரர் மீது தாக்கு
ADDED : மே 02, 2024 12:44 AM
சென்னை, சென்னை அண்ணாசாலையில் உள்ள, சங்கம் ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில், போலீஸ்காரர் சேது மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் சென்றனர். சேது, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் பாதுகாவலர் எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் உணவு பரிமாற்றம் இல்லாத இருக்கை பகுதியில் அமர்ந்துள்ளனர். இருவரையும் ஹோட்டல் ஊழியர்கள் வேறு பகுதியில் அமருமாறு கூறியுள்ளனர். அப்போது வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், சேது மற்றும் பிரவீன் ஆகியோரை தாக்கி உள்ளனர். தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஹோட்டல் ஊழியர்கள் பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரேந்தர், 26, டிங்கு அலிசா, 29, தினேஷ், 26, சவிஜித் குமார், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

