/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பங்குச்சந்தை ஆசை காட்டி ரூ.60 லட்சம் சுருட்டியவர் கைது கேரளா நபர் கைது
/
பங்குச்சந்தை ஆசை காட்டி ரூ.60 லட்சம் சுருட்டியவர் கைது கேரளா நபர் கைது
பங்குச்சந்தை ஆசை காட்டி ரூ.60 லட்சம் சுருட்டியவர் கைது கேரளா நபர் கைது
பங்குச்சந்தை ஆசை காட்டி ரூ.60 லட்சம் சுருட்டியவர் கைது கேரளா நபர் கைது
ADDED : ஆக 29, 2024 12:32 AM

ஆவடி,
அம்பத்துார், ஒரகடம், காந்தி பிரதான சாலையைச் சேர்ந்தவர் கிளாட்வின், 37. இவர், கடந்த பிப்., 21ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:
கடந்த 2021ல், எங்கள் வீட்டின் மாடியில் அறை கட்ட எச்.டி.எப்.சி., வங்கியில் 16 லட்சம் ரூபாய் கடன் பெற்றேன். இதை, என் நண்பர் உமேஷ் குமாரிடம் தெரிவித்தேன்.
பணத்தை 'ஷேர் மார்க்கெட்'டில் முதலீடு செய்தால், இப்பணத்தை மூன்றே மாதங்களில் இரண்டு மடங்காக திருப்பி தருவேன்' என ஆசைக்காட்டினார்.
இதை நம்பி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பணம் பெற்று 60 லட்சம் ரூபாய், உமேஷ் குமாரின் பெடரல் வங்கி கணக்கில், கடந்த 2021 முதல் 2022 வரை சிறுக சிறுக அனுப்பி வைத்தேன். மூன்று மாதம் கழித்து பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் ரேகா, தலைமறைவாக இருந்த கேரள மாநிலம், பத்தணம்திட்டா, வடேஷரிக்கரா பகுதியைச் சேர்ந்த உமேஷ் குமார், 33, என்பவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

