/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4.25 கோடி மோசடி ஆடிட்டரை ஏமாற்றியவர் கைது
/
ரூ.4.25 கோடி மோசடி ஆடிட்டரை ஏமாற்றியவர் கைது
ADDED : ஆக 23, 2024 12:23 AM

ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, திருநகரைச் சேர்ந்தவர் மோகன்பாபு, 36; ஆடிட்டர். அன்னை 'ஆடிட் பர்ம்' என்ற பெயரில், தனியார் நிறுவனங்களுக்கு 'அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங்' செய்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில், 2015 முதல் 2021 வரை, தென்காசியைச் சேர்ந்த வெற்றிவேல், 34, என்பவர் பணிபுரிந்து வந்தார்.
மோகன்பாபுவிற்கு, குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்ததால், தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை.
இதனால், வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.டி., வரி கட்டுவதற்கு ஏதுவாக, அவரது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட், யூசர் ஐ.டி., மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை, வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார்.
இதை பயன்படுத்தி கொண்ட வெற்றிவேல், 2018 அக்., முதல், வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.டி., வரி கட்ட கொடுத்த பணத்தை கையாடல் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்து மோகன்பாபு கேட்டபோது, 4.25 கோடி ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்ட வெற்றிவேல், அப்பணத்தை திருப்பி தருவதாக, அவரை தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் மோகன்பாபு, ஜூனில் அளித்த புகாரின்படி விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், வெற்றிவேலுவை நேற்று முன்தினம் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

