தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ‘போக்சோ’ வழக்கில் கைதானவர் தற்கொலை

‘போக்சோ’ வழக்கில் கைதானவர் தற்கொலை

‘போக்சோ’ வழக்கில் கைதானவர் தற்கொலை


ADDED : ஆக 04, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: போக்சோ வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

காவாங்கரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் குமாரசாமி, 60. கடந்த மே 12ம் தேதி, 14 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன் ஜாமினில் வந்தவர், தினசரி புழல் காவல் நிலையத்தில் கையெழுத்துப்போட்டு வந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வழக்கில் குமாரசாமியின் மனைவி மற்றும் மகன்களை சேர்க்குமாறு வலியுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் குமாரசாமியின் மனைவி, மகன்களை அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குமாரசாமி, நேற்று முன்தினம் விஷமருந்தி சாலையில் விழுந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு சோழவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குமாரசாமி இறந்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us