ADDED : ஆக 04, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
இதைத்தொடர்ந்து மாங்காடு நகராட்சியில் நேற்று வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா ஆகியோர் பங்கேற்று பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை நடத்தி அடிக்கல் நாட்டினர்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘மாங்காடு நகராட்சியில் மூன்று இடங்களில் கழிவு நீரேற்று நிலையம், 84 கி.மீ., துாரத்தில் கழிவு நீர் குழாய்கள், 5.52 கி.மீ., நீளத்திற்கு பிரதான குழாய்கள், 3,667 இயந்திர நுழைவாயில் குழிகளுடன் பாதாள சாக்கடை திட்டம் அமைய உள்ளது. இதன்மூலம் 20,258 வீடுகளுக்கு கழிவு நீர் குழாய் இணைப்பு கிடைக்கும். இந்த பணிகளை 2029ம் ஆண்டு ஜூலை 26ம் தேதிக்குள் முடிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
