/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடில் பஸ் நிலையம் இல்லாததால் சாலையில் நிற்கும் பஸ்களால் நெரிசல்
/
மாங்காடில் பஸ் நிலையம் இல்லாததால் சாலையில் நிற்கும் பஸ்களால் நெரிசல்
மாங்காடில் பஸ் நிலையம் இல்லாததால் சாலையில் நிற்கும் பஸ்களால் நெரிசல்
மாங்காடில் பஸ் நிலையம் இல்லாததால் சாலையில் நிற்கும் பஸ்களால் நெரிசல்
ADDED : ஏப் 22, 2024 01:19 AM

மாங்காடு:சென்னை அருகே உள்ள மாங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில், நவக்கிரக தலங்களில் சுக்ரன் தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன.
இங்கு, பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். மேலும், மாங்காடு சுற்றி ஏராளமான குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள பலர் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், மாங்காடில் பேருந்து நிலையம் இல்லை. இதனால், பேருந்துகள் சாலையோரம் நின்று பயணியரை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன.
இதனால், கடும் நெரிசல் ஏற்பட்டு, அரசு பேருந்துக்கு பின்னால் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குன்றத்துார்- - குமணன்சாவடி சாலையில், காமட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் கிடப்பில் உள்ளன.
எனவே, மாங்காடு நகராட்சி நிர்வாகத்தினர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து துவக்கி முடித்தால் மட்டுமே, மாங்காடில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

