/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவியர் பங்கேற்பு
/
ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவியர் பங்கேற்பு
ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவியர் பங்கேற்பு
ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜூன் 28, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'யூ - 20' ஆசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவியர் இருவர் இடம்பெற்றுள்ளனர்.
சீனாவில், பெண்களுக்கான யூ - 20 ஆசிய அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஜூலை முதல் வாரத்தில் நடக்கின்றன. இதில், இந்தியா உட்பட ஆசிய அளவிலான பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கும் பெண்கள் அணியில், சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் படிக்கும் வீராங்கனையர்களான எம்.நிதிஷா மற்றும் ரக் ஷா கென்வார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.