/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 23, 24ல் திருவள்ளூரில் தடகளம்
/
வரும் 23, 24ல் திருவள்ளூரில் தடகளம்
ADDED : ஆக 15, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட 'அத்லெட்டிக்' சங்கம் சார்பில், 15வது ஜூனியர் 'அத்லெட்டிக்' போட்டிகள், வரும், 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்கள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், எறிபந்து ஆகிய போட்டிகள், 8, 10, 12, 14, 16, 18 மற்றும் 20 வயது வாரியாகவும், மற்றும் அனைத்து வயதினரும் பங்கேற்கும் போட்டி என, தனித்தனியாக நடத்தப்படும்.
வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், அடுத்த மாதம் ஈரோட்டில் நடக்கும் மாநில போட்டிகளில் பங்கேற்பர். விபரங்களுக்கு, 95661 98156 என்ற எண்ணை அழைக்கலாம்.