/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்., பேட்டரி திருடியவர் கைது
/
ஏ.டி.எம்., பேட்டரி திருடியவர் கைது
ADDED : மே 17, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர், அண்ணாநகர், ஐந்தாவது அவென்யூவைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 39. இவர், ஏ.டி.எம்., பராமரிப்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
கடந்த 14ம் தேதி கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியிலுள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்.,மில் பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்ற போது, 'யு.பி.எஸ்., பேட்டரி'யை காணவில்லை.
இது குறித்து ஜெய்சங்கர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார், தொடர்புடைய வியாசர்பாடி, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த அமீர் உசேன், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

