ADDED : மே 24, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம், சேலை மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார், 27; ஆட்டோ ஓட்டுனர்.
இவர், நேற்று முன்தினம் இரவு தன் ஆட்டோவை, அதே பகுதியிலுள்ள நியூ ஆவடி சாலை, குடிசைப் பகுதியில் நிறுத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை, 2:20 மணியளவில், இவரது ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்படி வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஆட்டோ அருகே நிறுத்தப்பட்டிருந்த மூன்று 'பைக்'குகளும் சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தில், தன் வீட்டின் அருகில் வசிக்கும் அப்பு என்பவர் உள்ளிட்ட சிலர் மீது சந்தேகம் உள்ளதாக, அயனாவரம் போலீசில் அரவிந்த் குமார் புகார் அளித்தார்.
அப்பு உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.