ADDED : பிப் 27, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் சரத், 35. இவர், துாய்மை பணி செய்து கொண்ேட ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இருதினங்களுக்கு முன், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம் முன் ஆட்டோவை நிறுத்தினார்.
அரை மணி நேரத்தில், ஆட்டோ திருடப்பட்டது. செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், சோழிங்கநல்லுார், ஏரிக்கரையைச் சேர்ந்த தீபக், 24, என்பவர் திருடிச் சென்றது தெரிந்தது. போலீசார், நேற்று தீபக்கை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.