/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை
/
புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை
புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை
புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை
ADDED : ஜூலை 12, 2024 12:45 AM

ஆவடி, வீடுகளுக்கு குழாய் வாயிலாக காஸ் வினியோகம் செய்வதற்காக, சாலைகளில் குழாய் புதைக்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில், குழாய் பதிப்பு பணி நடக்கிறது.
இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையம், அண்ணாதுரை சிலை அருகே புதைக்கப்பட்டிருந்த காஸ் குழாயில், நேற்று முன்தினம், காஸ் அனுப்பி சோதனை செய்யப்பட்டது.  அப்போது, குழாயில் காஸ் கசிவு ஏற்பட்டதால், வேகத்தடை அமைப்பு போல், சாலை மேடாக மாறியது.
தகவலறிந்த ஆவடி போலீசார், மேடான சாலையைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த, தனியார் காஸ் நிறுவன ஊழியர்கள், சாலையை தோண்டி குழாயில் ஏற்பட்ட காஸ் கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு பெய்த மழையால், பணிகள் நிறுத்தப்பட்டன. பின், நேற்று காலை மீண்டும் பணிகள் துவங்கி, குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டது.
வாகனங்கள் நெரிசலின்றி செல்ல போக்குவரத்து போலீசார் வழி ஏற்படுத்தி உள்ளனர். மாற்று வழியில் அனுப்பினர்.

