/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விழிப்புணர்வு மினி மாரத்தான் 2 தங்கம் வென்ற மாணவர் விளையாட்டு செய்திகள்

ADDED : ஆக 09, 2024 12:30 AM

காஞ்சிபுரம், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி, அம்பத்துாரில் உள்ள அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்தது.
மொத்தம், 8 கி.மீ., துாரம் கொண்ட இப்போட்டியில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் வி.சுரேஷ் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
மேலும், தாம்பரம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த தமிழ்நாடு விஷன் ஒலிம்பிக் கோல்டு மெடல் மினி மாரத்தான்' 10 கி.மீ., துார போட்டியிலும் பங்கேற்ற மாணவர் சுரேஷ், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இரு தங்கப்பதக்கம் வென்ற மாணவர் சுரேஷை, கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.