/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையில் மாணவி வீசிய பச்சிளம் குழந்தை மீட்பு
/
குப்பையில் மாணவி வீசிய பச்சிளம் குழந்தை மீட்பு
ADDED : பிப் 27, 2025 12:27 AM

சேலையூர், சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், பாலாஜி நகர் பிரதான சாலையோரம்கொட்டப்பட்டுள்ள குப்பைக்கழிவில், குழந்தை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், குழந்தையை மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு குழந்தைகள் நல வாரியத்தில் ஒப்படைத்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், குழந்தையை குப்பையில் வீசி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், அதே பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி என்பது தெரியவந்தது.
மேலும், அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி என்பதும், வீட்டிலேயே அவருக்கு, அவரது தாய் பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண்ணை மீட்ட போலீசார், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையை குப்பையில் வீசி சென்றது குறித்து விசாரிக்கின்றனர்.

