/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலியல் தொழிலில் ஈடுபட்ட வங்க தேசத்தவர்கள் கைது
/
பாலியல் தொழிலில் ஈடுபட்ட வங்க தேசத்தவர்கள் கைது
ADDED : செப் 18, 2024 12:25 AM
வேளச்சேரி, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த வங்கதேசத்தவர் இருவரை கைது செய்துள்ள வேளச்சேரி போலீசார், தப்பிய மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.
மோசா, 27 மற்றும் இவரது அண்ணி பாத்திமா, 25, ஆகியோர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்நாட்டைச் சேர்ந்த ரும்கி, 24, என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை என கூறி, இந்தியாவுக்கு அழைத்து வந்து, சென்னையில், ஹபீல், 28, ஜோசித், 30, ஆகிய வங்கதேசத்தவர்களிடம் ஒப்படைத்து, 40,000 ரூபாய் பெற்றுள்ளார்.
பின், மோசா, பாத்திமா ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இவர்களில் மோசாவையும், யாசின்மியா என்பவரையும் போலீசார் செய்தனர். தலைமறைவான, பாத்திமா, ரும்கி, ஹபீல், ஜோசித் ஆகியோரை தேடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக, வங்கதேசத்தில் இருந்து திரிபுரா எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்தது விசாரணையில் தெரிந்தது.
இவர்கள் மீது, பாலியல் தொழில், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.