ADDED : ஆக 04, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு, வங்கியில் மின் கசிவால் தீப்பற்றியது.
தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் பில்லர் தீயணைப்பு வீரர்கள் வந்து, அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
பால்சீலிங், 'ஏசி' மற்றும் இணைய கேபிள், தீயில் எரிந்து நாசமாகின. வங்கி சேவைகளுக்காக வந்த வாடிக்கையாளர்கள், மிகவும் சிரமப்பட்டனர்.