ADDED : ஜூலை 12, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் அருகே மேடவாக்கம் டேங்க் சாலை, சங்கரபத்தன் தெரு சந்திப்பில் விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு துளசி என்பவர் பூசாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். துளசி கோவிலை நேற்று காலை திறந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
'சிசிடிவி' காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர். உண்டிலில் 5,000 ரூபாய் இருந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

