ADDED : மே 30, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, பழத்தோட்ட சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இங்கு, நிகழ்ச்சி மட்டும் நடத்தவும், விருந்து பரிமாற வெளியே திறந்த வெளியில் கொட்டகை அமைத்து நடத்த வேண்டியும் இருந்தது.
விருந்து பரிமாற தனி மண்டபம் அமைக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், சமுதாய நலக்கூடத்தை ஒட்டி, 250 பேர் அமரக்கூடிய விருந்து மண்டபம் அமைக்கப்படுகிறது.